ஆச்சரியக் குறியே, உன்தமிழ் மயங்கும் வரியே!
பாடல் ஒன்றுப் பாடநீ மேடை ஏறும் போது,
உன்தகுதி மீது பிறவிப் புழுதி படிய லாமா?
திறமைகள்மேல் சாணம்தெளிப்பது யாரோ?
அறிவியல் வினா நாயகனாய்நீ தோன்ற, உன்முன்;
விண்தொட்டு நிமிர்ந்து விடைகளை சமர்ப்பிக்க - நீ
நம்பும் படைப்பு ஆண்டவன் வருவானா? - ஆய்வால்
கேள்விகளும் நீயே பதில்களும் நீயே எனநீ ஆவாயா?
பிறப்பு குறிகளை தகுதியாக நிர்ணயித்து – உன்
கரு உரு மூலத்தளங்கட்கு சாதி பெயரிட்டு – பெற்ற
அன்னைத் தந்தையை அவமதிப்புச்செய்ய – அவனை
விடலாமா? நீ நிமிர முன்னேற, ஏணிகடவுளா?
தாயின் மடியில் அமர்ந்து தமிழும் பருகி வளர்ந்தாய்
காயம் வியக்க தமிழால் அறிஞனாக எழுந்தாய்!
சாதிச் சாயம் குளியல் இலலை;
108 தேங்காய் கள்உடைத்ததில்லை!
வெற்றிச் சிகரம் அடைய அங்கே
பேதப் புழுதிகள் படிய லாமா?
திறமைகள்மேல் சாணம் தெளிப்பது யாரோ?
தோழ்வி நெருங்கும்போதும் துவண்டு முடங்கிடாதே!
வாழ்வு என்ன வாழ்வு என்று இறங்கி அடங்கிடாதே!
வளையும் முதுகை நிமிர்த்தி எவனிலும்
உயர்ந்தவன் நீயேஎன காட்டவேண்டும் - ஊருள் பேதம் அகற்றி ஒற்றுமைக்கு பாலம் அமைக்க வேண்டும்
Comments
Post a Comment